நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு எதிர்பாரா பேரிடி

0 7

ஈரான் ஆதரவு ஹவுதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) பதிலடி வழங்கியுள்ளது.

ஹவுதிகளுக்கு எதிராக யேமனில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் காட்சிகளை இராணுவம் வெளியிட்டுள்ளது.

14 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சுமார் 2,000 கிலோமீட்டர்கள் பறந்து, யேமனின் மேற்கு கடற்கரை மற்றும் தலைநகர் சனாவிற்கு அருகில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது 60 இற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

மேலும், எரிபொருள் மற்றும் எண்ணெய் கிடங்குகள், இரண்டு மின் நிலையங்கள் மற்றும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் எட்டு இழுவை படகுகள் ஆகியவற்றையும் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது

இந்த நிலையில், குறித்த தாக்குதல்கள் ஹவுதிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும் அடி என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை, IDF ஆல் வெளியிடப்பட்ட காணொளிகளானது, தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் மத்தியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் காட்டுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.