அதிரடியாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு: அரசாங்கத்திற்கு வழங்கிய பதில்

0 9

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து எவ்வாறு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை விளக்கி இன்று (19) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், தற்போதுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் 7,000 மில்லியன் ரூபா பணம் பல்வேறு கொடுப்பனவுகளுக்கு மத்தியில் இருந்ததாகவும், ஆனால் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி 11,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மீதியை பேணுவதற்கு அவர் உழைத்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுக்காக 82 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்திள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.