அநுரவின் இந்தியப் பயணம் : கடும் கோபத்தில் சீனா

0 1

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayaka) மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்களை செய்தியாக்கிய இந்திய ஊடகங்களின் கருத்துக்களை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் தொடர்பில் சில இந்திய ஊடகங்கள் இந்தியா (India) – இலங்கை (Sri Lanka) உறவில் இருந்து கவனத்தை திசை திருப்பி சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடுகளை விதைக்க முன்வந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதன்படி இந்திய ஊடகங்களின் விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சீனா முன்வைத்துள்ளது.

இத்தகைய மனநிலையுடன், சில இந்திய ஊடகங்கள் எதிர்மறை ஆற்றலின் பாத்திரத்தை வகிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறிய அண்டை நாடுகளின் வளர்ச்சி நலன்களை அடியோடு புறக்கணிக்கின்றன. அண்மையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது இருதரப்பு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ளதாக இந்திய தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாக இந்தியா இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான எந்த வகையிலும் தனது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற இலங்கையின் நிலைப்பாட்டை திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.

இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகள் பற்றிய நிலைப்பாட்டை குறிக்கின்றன. சீனக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பிலான எதிர்மறைகளை இது எடுத்துக்காட்டுகிறது.

சில இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் காலாவதியான கண்ணோட்டத்தை பின்பற்றுகின்றன. தெற்காசிய நாடுகளை தங்கள் செல்வாக்கு மண்டலமாக கருதுகின்றன.

இது இலங்கைக்கு உறுதியான நன்மைகளை வழங்கியுள்ளது. எனவே, திசாநாயக்க சமச்சீர் மற்றும் நடைமுறை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், சில இந்திய ஊடகங்கள் தெற்காசிய நாடுகளின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்குவதற்கான உரிமைகளை நிராகரிப்பதாகத் தோன்றுகிறது. இது அவர்களின் வேரூன்றிய வெறுப்பு மனநிலையை வெளிப்படுத்துகிறது என சீனா மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.