நாடாளுமன்றில் நேற்றையதினம்(18) தனது கல்வித்தகமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(SAJITH PREMADASA) நிரூபித்திருந்தார்.அத்துடன் பிறப்புச்சான்றிதழை யாரும் கேட்டாலும் என சந்தேகம் கொண்டு அதனையும் கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தனது கல்விச்சான்றிதழை நிரூபித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவற்றை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில் அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ(NALINDA JAYADISSA) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இன்று (டிசம்பர் 19) காலை வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சான்றிதழை ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றார்.