விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

0 2

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த உர விநியோகம் இன்று(19) நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ரமேஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டது மேலும் நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.

12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (18) கமநல சேவை நிலையத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேச கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 2613 விவசாயிகள் இவ் இலவச மானிய பசளையை பெற தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக கிண்ணியா கமல சேவை நிலையத்துக்கு 50 கிலோ நிறையுடைய 2339 பொதிகளுடைய பசளைகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களின் முன்னுரிமை அடிப்படையில் பசளைகள் விநியோகப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.