இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

0 2

இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த இலக்கை எட்டிய பின்னர், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு மில்லியன் இலக்கை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் (Sri Lanka) டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் (Russia) இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவில் இருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் இலங்கைக்குச் வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து எல்ல பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

எல்ல பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நகரவே முடியாத சூழல் காணப்படுகின்றன.

வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பூங்கா, ராவணஎல்ல நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஹோட்டல்கள் என்பவற்றுக்கு அதிகம் செல்வதாகவும் இதனால் எல்லவில் வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிக சுற்றுலா பயணிகள் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை அனுபவித்து மகிழ்கிறார்கள்.

இந்த பகுதியில் 9 வளைவுகள் கொண்ட பாலம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.