தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலை

0 2

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுன் இன்று (14.12.2024) காலை சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் காவல்துறையினர் இன்று (13.12.2024) அல்லு அர்ஜுனை கைது செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.