வெற்றியின் பின்னர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்

10

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்கு (Italy)  செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி நேற்று (09) மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார்.

மூன்றாவது முறை பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திர மோடி இத்தாலிக்குச் செல்லவுள்ளார்.

இத்தாலியின் அபூலியாவில் ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடன், மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இத்தாலி, இந்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி ஜி7 மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்றது.

மார்ச் 2023இல் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி டில்லிக்கு வருகை தந்தபோது, இத்தாலி மற்றும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.