கும்கி, மைனா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அவரது மகள் ஹேசல் ஷைனி இன்ஸ்டாவில் பிரபலமானவர் தான்.
தற்போது மகள் ஹேசல் ஷைனியை ஹீரோயின் ஆக்கி ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் பிரபு சாலமன்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிகை வனிதா விஜயகுமார் மகன் விஜய் ஸ்ரீஹரி தான் நடிக்கிறாராம்.
படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல் வந்திருக்கிறது.
Comments are closed.