பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா (United States) இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன (Kapila Chandrasena) மற்றும் ரஷ்யாவுக்கான (Russia) முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Veeratunga) ஆகியோருக்கே இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையூட்டல் பெற்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c) சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.