புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

4

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் உயர்தர தொழில்முறை நண்பர்களுடன் நடத்திய சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து கேலிக்கூத்தான கருத்துக்கள் வெளிவந்த போதே விக்ரமசிங்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

 விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்

அக்கருத்துக்களை செவிமடுத்த ரணில், “நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்” என தெரிவித்ததுடன் எதனையும் கேலி செய்யவில்லை என்றும், அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை (Karu Jayasuriya)அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.