அமெரிக்காவில் ஏற்படவுள்ள பேரழிவு குறித்து நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

5

அமெரிக்காவை(US) மிக மோசமான இயற்கை பேரழிவு ஒன்று மிக விரைவில் ஏற்படவுள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்காவின் 140,000 சதுர மைல்களை மொத்தமாக அழித்து குறைந்தது ஏழு மில்லியன் மக்களை பலி வாங்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 100 அடி உயர சுனாமி ஏற்படும் என்றும், இதில் மக்கள் கூட்டம் கொத்தாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(05) வடக்கு கலிபோர்னியாவின் கடற்பகுதியில் ரிக்டர் அளவில் 7 என பதிவான நிலநடுக்கத்தை அடுத்தே நிபுணர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 9 என பதிவாகும் நிலநடுக்கத்தால், மில்லியன் எண்ணிக்கையிலான கட்டிடங்கள் சேதமடையலாம் அல்லது மொத்தமாக தரைமட்டமாகலாம் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், 14,000 பேர்கள் வரையில் கொல்லப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்காவை மொத்தமாக புரட்டிப்போடும் அப்படியான ஒரு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது வாஷிங்டன் மற்றும் ஓரிகான், வடக்கு கலிபோர்னியா மற்றும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியை மொத்தமாக விழுங்கிவிடும் என்கிறார்கள்.

இதனால் ஏற்படும் உள்ளூர் பொருளாதார பாதிப்பு மட்டும் 100 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த பேரழிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், “முதலில் நிலநடுக்கம் ஏற்படப் போவதாக நாய்களால் உணர முடியும் என்றும், 30 முதம் 90 நொடிகளில் நில அதிர்வை மக்கள் உணரத்தொடங்கும் போது பொருட்கள் அலமாரியில் இருந்து விழத் தொடங்கும்.

தொடர்ந்து உக்கிரமான அதிர்வுகள் ஏற்படும். குறைந்தது 3 நிமிடங்கள் மக்கள் நிற்பதில் கூட சிரமப்படுவார்கள், கட்டிடங்கள் ஆடும், உடைந்து நொறுங்கும் கடுமையான சத்தத்தால் அவர்களில் காதுகள் அடைபடும்.

மட்டுமின்றி, தொடர்ச்சியான நடுக்கம் முடிவில்லா நிலச்சரிவுகளை ஏற்படுத்தும். சியாட்டிலில் மட்டும் 30,000 நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குள், 100 அடி உயரத்தில் சுனாமி தாக்கும். 12 முதல் 24 மணி நேரத்திற்கு பிறகு நகரங்களில் சூழ்ந்த தண்ணீர் குறைய ஆரம்பிக்கும். அப்போது நிலம் நிரந்தரமாக 3 அடிக்கு மேல் கீழிறங்கியிருக்கும்.

உள்நாட்டில், சக்திவாய்ந்த நில அதிர்வுகள் குறைந்தபட்சம் ஒரு நாளாவது தொடரும், இதனால் மக்கள் மீண்டும் கட்டிடங்களுக்குள் செல்வதைத் தடுக்கிறது. சுமார் 7,000 சாலைப் பாலங்கள் சேதமடையும் போது மில்லியன் கணக்கான மக்கள் உதவி பெறுவதில் இருந்து தடுக்கப்படலாம்.

அமெரிக்க கடற்படையால் ஒரு வாரத்திற்கு சிதைந்த கடற்கரையை அடைய முடியாது. 85 சதவீத துறைமுகங்கள் மற்றும் குடிநீர் ஆலைகள் கடுமையாக சேதமடைந்து அல்லது அழிக்கப்படும்.

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் அல்ல வருடங்கள் ஆகலாம். காஸ்காடியா நிலநடுக்கம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால், மொத்தமாக 7 மில்லியன் மக்கள் பலி வாங்கப்படலாம்.”என குறிப்பிட்டுள்ளனர்.

ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரிக்டர் அளவில் 9 என பதிவான நிலநடுக்கத்தால் 130 அடி உயர சுனாமி உருவானது, இது 1,200 மைல்களுக்கு மேலான கடற்கரையை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இதன்போது, நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 18,500 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இதைவிட மிக மோசமான பேரழிவை காஸ்காடியா நிலநடுக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Comments are closed.