எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, “தேங்காய் உற்பத்திக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவன அமைப்பு உள்ளது.
அரசாங்க தோட்டங்களில் இருந்து நகர மக்களுக்கு 130 ரூபாய்க்கு தேங்காய் பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அத்தோடு, அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 220 ரூபா விலையில் இரண்டு இலட்சம் கிலோகிராம் அரிசியை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளனர்” என அமைச்சர் கூறியுள்ளார்.
Comments are closed.