ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 4 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக இரான் விக்ரமரட்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல், பீரிஸ், மனோ கணேசன் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக தாம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.