வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்,

4

வவுனியா(vavuniya) குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன. அதில் வவுனியா நகரை அண்டியுள்ள பிரதான குளமான வவுனியா குளமும் வான் பாய்ந்து வருகின்றது.

வான் பாயும் நீருடன் குளத்து மீனும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி என்பவற்றை கொண்டு வான் பார்க்க வரும் மக்களும் மீன்களை போட்டி போட்டு பிடிப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்பேது சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அதனை பிடித்துச் செல்பவர்கள் மகிழ்ச்சியில் செல்வதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments are closed.