தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் இன்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு தேசத்திற்காய் உயிர் நீத்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மல்லாவி – ஆலங்குளம் துயிலுமில்லத்திலும் ஒன்று திரண்ட மக்கள் தமது உறவுகளுக்காக உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தாய்மொழியனின், தாயார் கோ.சரஸ்வதி பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
ஈகைச் சுடரினை ஏற்றிய அவர் அங்கு கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Comments are closed.