இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி நடந்து முடிந்த இலங்கை பொது தேர்தலில் புதியதாக 175 பேர் தெளிவாகியுள்ளனர்.
இவ்வாறு புதிதாக தெரிவானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, இந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 திகதிகளில் விசேட செயலமர்வு ஒன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற செயன்முறைகள், நிர்வாக நடவடிக்கைகள் போன்றவை குறித்து இந்த செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தும் குறித்த தினத்தில் வழங்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோகினதீர தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய தினம் (21) பத்தாம் நாடாளுமன்றின் கன்னி அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.