இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்றையதினம் (21.11.2024) நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது வடக்கு கிழக்கு மாகணங்களிலிருந்து தொரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan), துரைராசா ரவிகரன் ( T. Raviharan) உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.