சீமானின் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பொதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.
அவசரமே வேண்டாம். நாங்கள் இப்போதே மக்கள் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் தலைவர் கூறும் பணிகளை செய்துகொண்டே இருக்கிறோம். அடுத்ததாக நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்படும்.
18ஆம் திகதி எந்த ஒரு நிர்வாகிகள் கூட்டமும் இல்லை. அந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.