2/3 பெரும்பான்மையை கொண்ட அநுர அரசின் நகர்வுகள்.!

17

தேசிய மக்கள் சக்தியின் 2/3 பெரும்பான்மையை கொண்ட புதிய அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்னும் எதிர்பார்ப்பு பலதரப்பினருக்கு மத்தியில் இருந்து வருகின்றது.

புதிய மாற்றத்தை எதிர்நோக்கி மக்கள் தெரிவு செய்துள்ள இடதுசாரி கொள்கை உடைய அரசாங்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளவுள்ள அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகள் எண்ணிலடங்காதவை.

இவ்வாட்சியின் கீழ் இயங்கப்போகின்ற எதிர்வரும் ஐந்து வருடங்களில் இதுவரை காலமும் மக்கள் வேண்டி நின்ற தேவைப்பாடுகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமா என்பது பொருத்திருந்து பார்க்க வேண்டிய விடயம் தான்.

கடந்தகால அரசாங்கங்களால் பெறப்பட்ட கடன்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மக்களின், நாட்டின் அபிவிருத்தி என்பன மாற்றங்களுக்குட்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவாரா என்னும் வினாவிற்கு அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments are closed.