தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

19

வவுனியா(Vavuniya) – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தே பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்றையதினம்(19.11.2024) சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் உரையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு குறித்த ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் சம்பவ தினத்தன்று மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று(18) மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.