ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கையில் தனி ஒரு கட்சி இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.
நாடாளுமன்றத்தில் அந்தகட்சி 150 ஆசனங்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இதுவரை 18 மாவட்டங்களின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி 94 இடங்களைப் பெற்றுள்ளது.
Comments are closed.