யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : இறுதி தேர்தல் முடிவுகள்

13

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 80,830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63,327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 27,983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17 இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 22,513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.