பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

10

கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 136.20 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

குறித்த தகவல் கொழும்பு பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 13000ம் புள்ளிகளை தாண்டியது.

முன்னதாக, இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி பதிவாகியிருந்தது.

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 13,125.19 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டதன், மொத்த புரள்வு 6.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.