நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மதத்தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தினால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளையும் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.