அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவொருக்கு அவசர எச்சரிக்கை

9

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பீ.எச்.குணசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மணிக்கு 60 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வேகத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Comments are closed.