உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

4

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய படைவீரர்களை உக்ரைன் படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடகொரியாவின் உயரடுக்கு வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனிய தரப்பு, செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கு எதிராகவும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் வடகொரியா களமிறங்கியுள்ளது.

போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஆயுதங்களுடன் படைவீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியை மீட்க ரஷ்யா போராடி வரும் நிலையில், குறித்த பிராந்தியத்தில் களமிறக்கப்பட்ட வடகொரிய படைவீரர்களே கடுமையான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வடகொரிய வீரர்கள் குறித்து நாம் அச்சப்படவில்லை எனவும் வடகொரிய வீரர்களை ஒரு இக்கட்டான நிலைக்கு ரஷ்யா தள்ளியுள்ளது என்றும் உக்ரைனிய மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.