தட்டம்மை தடுப்பூசியை செலுத்தும் விசேட திட்டத்தினை நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைமுறைபடுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவகத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடு என்றபோதிலும், 2023 ஆம் ஆண்டிற்கு பின்னர் சில பகுதிகளில் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே 9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், தடுப்பூசி செலுத்தாத பலர் ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களும் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டுகின்றன.
Comments are closed.