ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய செய்தி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்கள் அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளியிட்ட சர்சைக்குரிய விடயங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் குழு அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு, “இந்த சேனல் 4 நிகழ்ச்சியில், அசாத் மவ்லானா என்ற நபர், நமது புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
இக்குற்றச்சாட்டுகளில் பிரதான குற்றச்சாட்டாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சஹாரான் தற்கொலைப்படையினருடன் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக எமது புலனாய்வு அமைப்புகள் கலந்துரையாடல்களை நடாத்தியது என்பதாகும்.
இதன்படி அசாத் மவ்லானா, சஹாரானுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருந்த சுரேஷ் சலேவுக்கும் சஹாரானுக்கும் இடையிலான சந்திப்பு 2018 பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சனல் 4 க்கு கருத்து தெரிவித்த அசாத் மவ்லானாவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் வனாத்தவில்லுவையில் உள்ள சஹாரன்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள வீடொன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், 2019 ஜனவரியில் சிஐடி அந்த இடத்திற்குச் சென்று 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களைக் கண்டுபிடித்ததாகவும் அசாத் மவ்லானா குறிப்பிடுகிறார்.
2018 பெப்ரவரி மாதம் வனாத்தவில்லுவில் சஹாரான் உள்ளிட்ட குழுவினரை சுரேஷ் சலே சந்தித்து ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்பது அசாத் மவ்லானாவின் குற்றச்சாட்டு.
2023 செப்டம்பர் 5 அன்று சனல் 4 இல் ஒளிபரப்பான சிறிலங்கா ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், பௌத்தத் தலைவரை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் கத்தோலிக்க தேவாலயங்களைத் தாக்கினர் என்பதாகும்.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நமது இராணுவப் புலனாய்வு அமைப்புகள் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மையா இல்லையா என்பதை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இமாம் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
இந்த நியமிக்கப்பட்ட குழுவிற்கு கர்தினால் மற்றும் திசைகாட்டியின் தலைவர்கள் அல்லது வேறு எந்த தரப்பினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
விசாரணையில், இந்த குழு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இந்த நிலத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் ஹனிஃபா முஃபிஸ். அவரிடம் விசாரித்ததில், இந்த நிலத்தில் உள்ள வீடு ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தற்காலிக வீடு போல் கட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
அதன் படி, பெப்ரவரி 2018 இல் இந்த நிலத்தில் எந்த வீடும் இல்லை, மௌலானாவின் கூற்றுப்படி, சுரேஷ் சலே மற்றும் சஹாரன் குழு அந்த வீட்டில் கலந்துரையாடியதாக கூறியுனார்.
இது அசாத் மவ்லானா சனல் 4 இல் கூறியது முழுப் பொய் என்பதை நிரூபிக்கிறது.
நவம்பர் 2016 முதல் டிசம்பர் 2018 வரை, சுரேஷ் சலே உளவுத்துறை நிறுவனங்களிலிருந்து விலகி, மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றினார்” என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Comments are closed.