மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அதிரடி கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா

8

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். சமூக நீதி குறித்து பேசப்படும் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்ட இவர் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தை எடுத்தார்.

இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலும் ‘ரத்தினவேல்’ கதாபாத்திரத்தில் பகத் பாசிலும் நடித்து இருந்தனர்.

இதில், மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் ‘மாரீசன்’ என்ற படத்தில் தான் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது.

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின் இவர்கள் இருவரும் நடிப்பதால் இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments are closed.