முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ வசதிக்காக வழங்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் சேவையை இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் போரை நிறுத்துவதில் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதியின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் எடுப்பதில் உடன்படவில்லை.
இவ்வாறு மகிந்தவின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலையை புறக்கணிப்பது அரசியல் பழிவாங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டத்தை நடத்தினார். மூன்று ஆசனங்கள் என்று நாடாளுமன்றத்தில் கேலி செய்யப்பட்டனர். ஆனால் இன்று பெரும் போராட்டம் நடத்தி ஆட்சிக்கு வந்துள்ளனர்.
மக்கள் எதிர்பார்த்த வகையில் தற்போது திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்னுடையது தான். அது தான் ஊழலுக்கு எதிரான முழக்கம்.இருப்பினும், அரசியல் பழிவாங்கல் விடயத்தில் உடன்பாடு இல்லை. கபட அரசியல்வாதிகள் போல் அவர்களின் கால்களை இழுக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.