பிக் பாஸ் அக்ரிமெண்ட் 40 பக்கங்களா? முழுசா வாசிக்காம முறையாக சிக்கிய போட்டியாளர்கள்

22

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு ஆன ஒப்பந்தம் மொத்தமாக 40 பக்கங்கள் என்று கூறப்பட்ட நிலையில், அந்த 40 பக்கங்களையும் பொறுமையாக படித்து தான் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் முத்துக்குமாரனும் சௌந்தர்யாவும் பிக் பாஸ் ஒப்பந்தம் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது 40 பக்கங்களை நீ முழுசா வாசிச்சியா? என்று சௌந்தர்யா முத்துக்குமாரிடம் கேட்கின்றார்.

அதற்கு நான்கு பக்கங்களை தான் வாசித்தேன். 40 பக்கங்களை எப்படி உட்கார்ந்து பொறுமையாக வாசிக்க முடியும்.. அது வாசிக்காதது எனது தவறு தான் என்பதை இப்போது உணர்கின்றேன்.. எனது அண்ணனிடம் கொடுத்து முழுமையாக வாசித்து முக்கியமானது மட்டும் சொல்லுங்கள் என்று கூறினேன்.. இது என்னுடைய தவறு.. அதை முழுசா வாசித்து இருக்க வேண்டும் என்று முத்துக்குமாரன் கூறியுள்ளார்.

நானும் 40 பக்கத்தையும் முழுசா வாசிக்கல என்று சௌந்தர்யா கூறிய நிலையில் மொத்த போட்டியாளர்களுமே இதனை முழுசா வாசிக்காமல் கையெழுத்திட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.