பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்த பாபா, 2025 ஆம் ஆண்டைக் குறித்தும் கணித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது கணிப்பானது, 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ இருப்பதாக கணித்துள்ளார்.
ஐரோப்பாவில் எழும் ஒரு பிரச்சினை குறித்து கணித்துள்ள பாபா, 2025 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கிடையே ஒரு போர் உருவாகும் என்றும் அது உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.
இவரை தொடர்ந்து பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸோவின் (Nostradamus) கணிப்புக்கள் தொடர்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அவர் எழுதி வைத்துள்ள கணிப்புகளில் 2025 ஆம் ஆண்டில் பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் பிரேசில் நாட்டில் எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் 2025 ஆம் ஆண்டைக் குறித்து ஒரே விதமாக கணித்துள்ளதால் அவர்களது கருத்துக்களைப் பின்பற்றுவோர் வியப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.