கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் வைத்து பேருந்தினை இடைமறித்த இருவர், கொட்டன்கள், பொல்லுகளுடன் சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதலில் காயமடைந்த சாரதி, பயணிகளுடன் பேருந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சாரதி, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனியார் பேருந்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவந்துள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Comments are closed.