இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த புதிய சிறப்பு வர்த்தக வரி ஒக்டோபர் 14 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 25 சதமும், மஞ்சள் பருப்புக்கு 25 சதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஒரு கிலோ கிராம் மாசி மற்றும் அதற்குப் பதிலான பொருட்களுக்காக 302 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனின் இறைச்சியைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபாய் என்ற உச்சபட்ச வரிக்கு உட்பட்டுள்ளது.
Comments are closed.