புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுக்கு பறந்த கடிதம்

6

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தாலியை முன்மாதிரியாகக் கொண்டு புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி புலம்பெயர் மக்கள் விவகாரத்தை மையமாகக் கொண்டு உச்சிமாநாட்டை நடத்துகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றைய தலைவர்களுக்கு உர்சுலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், புலம்பெயர்ந்தோரின் நாடுகடத்தலை அதிகரிப்பதற்கான சட்டத்திற்கான புதிய திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் அல்பேனியாவில் உள்ள மையத்திற்கு இத்தாலி சில புலம்பெயர் மக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், கடந்த புதன்கிழமை 16 ஆண்கள் அல்பேனிய துறைமுகமான ஷெங்ஜினுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், சில மணி நேரத்திற்கு பின்னர், அதில் இருவர் சிறார்கள் என்றும், இருவர் மருத்துவ உதவி தேவைப்படுபவர் என வெளியானதை அடுத்து, அவர்கள் இத்தாலிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் புலம்பெயர் மக்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்பிவைக்கும் திட்டத்தை பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களை உகாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை நெதர்லாந்து அரசாங்கமும் பரிசீலனைக்கு எடுத்துள்ளது.

இத்தாலி அரசாங்கம் முன்னெடுத்துள்ள அல்பேனியா திட்டத்திற்கு 650 மில்லியன் யூரோ செலவாகியுள்ளதுடன் கர்ப்பிணிகள், சிறார்கள் மற்றும் பலவீனமான நபர்களை அல்பேனியா அனுப்பும் திட்டத்தில் இருந்து இத்தாலி விலக்கு அளித்துள்ளது.

இருப்பினும் வலதுசாரி அரசியல்வாதியான பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Comments are closed.