இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
கடந்த 01.10.2024 அன்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடாத்தியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமதாகவே பிரித்தானியா இந்தத் தடையை இன்று (14.10.2024) அறிவித்துள்ளது.
குறித்த தடைகள் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், வான்படை தலைவர்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் கிரூஸ் ஏவுகணை வளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்புகள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மேலும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், G7 நாடுகள் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளதோடு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
Comments are closed.