ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

9

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் கோலானி படையணி சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பிறகு, தற்போது அந்த அமைப்பு தலைமை இல்லாத அணியாக காணப்படுகின்றது.

எனினும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் தாக்குதல் அதன் திறன்களை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதாக போரியல் வல்லுநர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எச்சரிக்கைகளை கையாளும் நோக்குடன் இஸ்ரேல் கோலானி படையணியை லெபனான் எல்லையில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தெற்கே கோலானி படையணியின் இராணுவத்தளமொன்றை நிறுவுவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.