சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

8

 பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம் எலிமிநேஷன் இருக்கும் பிக் பாஸ் குழு கூறி இருந்தது.

ஒவ்வொருவராக விஜய் சேதுபதி காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக ரவீந்தர், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

அதில் ரவீந்தர் எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி உறுதி செய்தார்.

எலிமினேஷன் தான் எதிர்பார்த்தது தான் என சொல்லி ரவீந்தர் சந்தோசமாக வெளியே கிளம்பினார்.

“இதெல்லாம் எனக்கு செட் ஆகாது டா..” என சொல்லி எமோஷ்னலாக பேசிய மற்ற போட்டியாளர்களையும் அவர் தடுத்தார்.

ரவீந்தர் சந்தோசமாக வெளியே சென்றாலும், ஜாக்குலின் மட்டும் கண்ணீர் விட்டு கதறினார். ‘நீங்க போயிருக்க கூடாது சார்’ என அவர் சொல்லி அழுதார்.

அதன் பிறகு அவரை சமாதானம் செய்த ரவீந்தர், மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியில் கிளம்பினார்.

Comments are closed.