நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ”எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது.
தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும்.
நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.
நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது. தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.
அதே போன்று ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது” என்றார்.
Comments are closed.