இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்

8

லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

லெபனானுக்கு எதிரான தாக்குதலின்போது ஐ.நா அமைதிப்படையினரின் இரு வீரர்கள் படுகாயமடைந்ததை தொடர்ந்து குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமைதிப்படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாங்கள் கருதுவதாக அந்த 40 நாடுகளும் தங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

இதில் இலங்கையும் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

மேலும், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுடன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்புடையது அல்ல எனறும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானில் உள்ள அமைதிப்படையினரின் இலக்குகளுக்கு அருகில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர்.

அமைதிப்படையினரின் முதன்மையான முகாம் அருகே இஸ்ரேல் இராணுவம் குண்டு வீச்சையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பை அளித்துவரும் பிரன்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

Comments are closed.