லெபனானில் இரண்டு இலங்கை படையினர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் , ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தமை தொடர்பிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் தூதர் ஹகாய் டிகான் இந்த சம்பவத்துக்காக கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது கிடைக்கப்பெறும் போது மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் தூதுவர் டிகான் அறிவி;த்துள்ளார்.
Comments are closed.