இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாகன பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான 61 வாகனங்களில் 33 வாகனங்கள் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கணினித் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட வாகன மேலாண்மை அமைப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.