பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதே எங்கள் இலக்கு! திலித் ஜயவீர

7

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந் எதிர்க்கட்சியொன்றாக செயற்படுவதே தங்கள் இலக்காகும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவி்த்துள்ளார்.

திலித் ஜயவீர தலைமையில்,  ‘பதக்கம்’ சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம்(12) மாலை வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொருத்தமான எதிர்க்கட்சியை உருவாக்கினால், அரசாங்கத்தை விட அதிகமான பணிகளைச் செய்ய முடியும். துணிச்சலான எதிர்க்கட்சியானது எப்பொழுதும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

‘நாங்கள் தேசியம் பற்றி பேசுகிறோம். இனவாதம் அல்ல. இலங்கையின் தேசியம் சிங்கள பௌத்த நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்ல பலர் பயப்படுகிறார்கள். இதைச் சொன்னால் மக்கள் கோபப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் இனவாதம் என்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அரசியல் செய்வதுதான் பிரச்சினை. இது தெற்கில் செய்யப்படுகிறது. வடக்கிலும் செய்யப்படுகிறது. நாங்கள் அதற்கு எதிரானவர்கள்.

ஒரு நல்ல எதிர்க்கட்சி எப்போதும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்பதில்லை. நாங்கள் துணிச்சலான எதிர்க்கட்சியாக இருப்போம். என்றும் திலித் ஜயவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.