அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களை அடுத்து வீடுகள்: வெளியான தகவல்

7

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு (Colombo) நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திடலில் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், குறித்த வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபாலவும் (Ananda Vijaypala) கருத்து வெளியிட்டிருந்தார்.

பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டும் எனவும் முறை கேடாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வாகனங்களை வைத்து மக்களை ஏமாற்றாமல் அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கடும் தொனியில் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.