சென்னை சூப்பர் அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் தோனியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய விக்கெட் கீப்பருமான ஜாம்பவான் எம்எஸ் தோனியின் இந்த புதிய தோற்றத்தின் புகைப்படங்களை சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி கிரிக்கெட்டை தாண்டி ஒவ்வொரு முறையும் தனது சிகை அலங்காரத்தை மாற்றி வருவதால் அதிகமானோர் தோனிக்கு இரசிகர்களாக மாறியிருக்கிறார்கள்.
2024 ஐபிஎல் சீசனில் 2007 ரி20 உலகக் கோப்பையில் இருந்து தோனி தனது நீண்ட கூந்தலுடனான தோற்றத்தில் இருந்தார்.இந்த தோற்றத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர்.
இந்நிலையில் தற்போது இந்த புதிய தோற்றத்துடனான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஐபிஎல் 2024 இன் முடிவில் எம்எஸ் தோனி ஓய்வு பெறுவார் என ஊகங்கள் இருந்த நிலையில் அது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
மீண்டும் ஒருமுறை அவரின் ஆட்டத்தை காண வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.