மனித பாவனைக்கு பொறுத்தமற்ற இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை சுங்கத் திணைக்களத்தால் (Department of Customs) கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை களஞ்சிய பிரிவில் நேற்று (11) இவை கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் 02 இலட்சத்து 15,000 அமெரிக்க டொலருக்கு இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஆசனிக் என்ற நச்சுப்பொருள் இருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றை நாட்டுக்குள் அழித்துவிடாமல் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றாடல், வன ஜீவராசிகள், வனவளம், நீர்வழங்கல், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பீ.ஆர். பிரபாத் சந்திரசிறி தெரிவித்தார்.
Comments are closed.