தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண் வேட்பாளர்

10

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான றஞ்சினி கனகராசா கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட றஞ்சினி கனகராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் தெரிவுக் குழுவிலும் பங்குபற்றியிருந்தார்.

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய இவர், கட்சியின் பிரதி தவிசாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தழிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தெரிவுப் பட்டியலில் இவரின் பெயர் பிரதானமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இவருக்கான தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தழிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்கும் இவரின் பெயர் தேசிய பட்டியலில் இடம்பெற வேண்டுமென்பது பலரதும் கோரிக்கையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.