நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியுள்ள மேலும் இரண்டு மூத்த அரசியல்வாதிகள்

7

நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியுள்ள மேலும் இரண்டு மூத்த அரசியல்வாதிகளின் தகவல் கிடைத்துள்ளது.

சிரேஸ்ட அரசியல்வாதிகளான டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரே இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்த அழகப்பெரும, மாத்தறைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

அதேபோன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் “கேஸ் சிலிண்டர்” எனப்படும் கூட்டணிப் பட்டியல்கள் இரண்டிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே, பல மூத்த அரசியல்வாதிகள், இந்தமுறை தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

Comments are closed.