உயிரை மாய்க்க முயன்ற இள வயது தாய் மற்றும் பிள்ளையை ரயில் சாரதி காப்பாற்றியுள்ளார்.
களனிவெலி ரயில் வீதியின் அவிசாவளை ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப நிலையங்களுக்கு இடையில் இளம் தாயும் அவரது மூன்று வயது மகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரயில் சாரதியின் அவதானம் காரணமாக நேற்று காலை குறித்த இருவரையும் காப்பாற்ற முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாயும் மகளும் ரயிலில் மோதுண்ட போதிலும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
இருவரும் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்தது. குறித்த ரயில் ஹிங்குரல உப நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட வேண்டும் என்பதனால் ரயில் வேகக் கட்டுப்பாட்டில் இயங்கியுள்ளது.
இதன் காரணமாக இருவரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
Comments are closed.